Tuesday, July 16, 2013

இன்றைய விவசாயத்துக்கு தேவையான உரம் பயிற்சியும் முயற்சியும்

                         நீங்கள் எதை நோக்கி பயணம் செய்யவேண்டும் என்பதை யார் யார் தீர்மானிக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும்  ஆனால் தெரிந்ததனால் என்ன பயன் என்று விட்டுவிட்டு உங்களின் பயணத்தை தொடருகின்றீகள்.
இதோ நீங்கள் எந்த உணவு உன்ன வேண்டும் என்று நீங்கள் தீர்மானிப்பதாய் நினைத்து கொண்டு இருகின்றிர்கள்.ஆனால் அது அல்ல நிகழ்வு,பன்னாட்டு நிறுவனங்கள் பல் இளித்து கொண்டு சொல்லுகின்றதைதான் நாம் உன்னுகின்றோம்,
                             
                  இதற்கான சான்று , அரிசி,கோதுமை, பிட்சா,பர்கர் ,இது போன்ற உணவுகளை கொடுத்து இதில் எதாவது ஒன்றை வலுகட்டாயமாக ஊட்டிவிடுகின்றனர்.அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும் பசுமை,வெண்மை போன்ற புரட்சி வழியாக நம்முடைய பழம் பெருமை வாய்ந்த விவசாயத்தில் புரட்சி செய்து சீரழித்து சினபின்னமகியது பின் அதன் வசமாகி ,அவர்கள் சொல்லும் உணவை உண்ணவும்,விதைகளை   பயிர் செய்யவும் வைத்துவிட்டனர்.

                 ஒரு சந்ததியை முழுவதுமாக அழிக்க வேண்டும் என்றால் அதன் வழிஇல்  கலப்பு மட்டும் செய் அது தானாக அழிந்து விடும் என்ற சொல் மேலை நாடுகளில் மிகவும் பிரபலமான வழக்கு,அதைதான் நாம் நாட்டில் உணவு தானியத்திலும் ,விதைகளிலும் அவர்கள் சிறப்பாக செய்து  விட்டார்கள்,விளைவு, விளைந்தது விஷம்,அந்த விஷத்தை வித விதமாக நாம் சாப்பிடு கொண்டு இருக்கிறோம்.

               இன்றைய சுழல்லில்,பலர் வெற்றிகரமாக இயற்கை விவசாயம்,பாரம்பரிய விதைகலையும் மீட்டு எடுத்து  வெற்றிகரமாக பயிர் செய்து வருகின்றனர்,அவர்களுக்கு நம் தோல் கொடுப்போம்,15 வருடங்களுக்கு முன்பு தண்ணீரை பணம் கொடுத்து வாங்குவது மிகுந்த வருத்தம் தக்க விசயமாக இருந்தது ,தற்போது அது கௌரவமாக உள்ளது.அது பூல இப்போது பிளாட் போட்டு  வீடு,நிலம்  வாங்குவது கௌரவமாக உள்ளது,அனால் இது பிறபகுதில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினரால் விவசாயம் செய்ய நிலம் விற்பனை செய்வதில் புரட்சி செய்ய போகின்றார்கள் ,அப்போது உணவும்,உணவு சார்ந்த பொருலும்தான் பொருளாதரத்தை புரட்டிபோடும் என்பது ஐயம் இல்லை எனவே இப்போதே தயாராகுங்கள் விவசாய நிலத்தை வாங்கவும் ,விவசாய நிலத்தை விற்பனை செய்யாமலும் இருக்க.....,



என்னோட நண்பர் ஒருவர் வீட்டில் ஏறக்குறைய 50 எக்கர் நிலம் வைத்துள்ளனர்,அதில் சொற்ப நிலத்தை குத்தகைக்கு விட்டுவிட்டு மற்ற இடத்தில் நெல்  பயிர் செய்து வருகின்றனர்அவர்களுடைய வீட்டில் எந்த வித முன்னற்றமும் இல்லை என்று கூறுகின்றனர்,கரணம் என்ன நெல் மட்டும் தான் பயிர்,உணவு ,அதைதான் பயிர் செய்ய வேண்டும் என்று அவருக்கு உணர்த்தியவர்கள் யார்?

அப்போதுதான் எனக்கு தோன்றியது முதலில் எப்படி,எங்கு,எப்போது என்ன பயிர் செய்ய வேண்டும்,என்ன முறையில் பயிர் செய்ய வேண்டும் என்பதை முறையாக சிறிய அளவில் முயற்சி செய்ய வேண்டும்,எனவே நம்முடைய விவசாயத்துக்கு தேவையான உரம் பயிற்சியும் முயற்சியும் என்பதில் சந்தேகம் இருந்தால் பயிற்சியும் முயற்சியும்செய்து மாற்று கருத்து சொல்லுங்கள்,































No comments:

Post a Comment