Thursday, August 29, 2013

சதுரகிரி மலைக்கு வாங்க.......

 எனக்கு பெரியதாக ஆன்மீகத்தில் ஈடுபாடு கிடையாது. பாதி நாத்தீகனாய் கேலி கிண்டலுமாக வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருந்த நேரத்தில், 2007ல் இருந்த சித்தர்கள் மேல் ஒரு தீவீர ஈடுபாடு கொண்டு அவர்களை பற்றி மேலும் மேலும் இணையம் வாயிலாகவும் புத்தகங்கள் மூலமாகவும் என்னுடைய தேடலை தொடங்கிய சமயம் ''சித்தர் பூமி சதுரகிரி'' ஆசிரியர் கே.ஆர். சினீவாச ராகவன் அவர்களது நூல் என்னுடைய கையில் கிட்டியது. அதை வாசித்து பின்பு தான் சதுரகிரிக்கு பயணம் செய வேண்டும் என்ற ஆவல் என்னை விடாமல் துரத்தியது, சில நேரங்களில் நான் மறந்தும் பல நேரங்களில் துனையிலாமல் பயணத்தை ஒரு 6 வருடத்திற்கு மறந்தேவிட்டேன்.
            தற்போது தற்செயலாக நண்பர் ஒருவருக்கு இயற்கையான தலைமுடி சாயத்தை இணையத்தில் தேடும்போது சதுரகிரி ஹெர்பல் என்ற வார்த்தையை பார்த்தபோது என்னுடைய மனதில் சுளிர் என்று மின்னல் வெட்டியது.
     அதன் பிறகு தலை சாயத்தில் கவனம் செலுத்தி ஒரு வழியாக கண்டறிந்தோம். அதை தயாரிப்பவர் சதுரகிரி மலையிலுள்ள மூலிகைகளை பயன்படுத்தி குறைந்த விலையில் மக்களுக்கு தருகின்றார். மேலும், மலை வாழ் மக்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றார். அவரை பற்றி அறிந்துக்கொள்ள  http://sathuragiriherbals.blogspot.in/
 பின்னர் நண்பர்களுடன் கலந்து ஆலோசித்து நான் தமிழ்நாடன், சுந்தராஜன், மணிகண்டன், அங்குராஜ் மற்றும் தன்ராஜ் அண்ணா, ராம்கி, சுதீஷ் போன்றோர் சதுரகிரி மலைக்கு சென்று திரும்பி வரும்போது ஹெர்பல் கண்ணன் அவர்களை சந்தித்து விட்டு வருவது தீர்மானித்தோம்.
              இரண்டு நாட்கள் பயணம்(19.8.13 தேதி முதல் 20.8.13 வரை) என்று தீர்மானித்தோம். 20ம் தேதி அன்று பௌர்னமி, 19ம் தேதி அங்கு சென்று கண்ணன் அவர்களை சந்தித்து 20ம் தேதி காலை மலையேறி மதியம் இறங்கி இரவு வீடு திரும்புவது என்று முடிவு செய்து கொண்டிருந்தோம்.
     இரண்டு நாள் பயணம் என்றபோது சுதீஷ் அவர்களும், மேலாளர் விடுப்பு தரவில்லை என்று தமிழ்நாடனும் வேறு வேலை இருப்பதாக ராம்கியும் , சுந்தருக்கு வேலைக்கான நேர்க்காணல் என்றும் கூறி விட்டனர் . மூன்று பேர் தான் மீதம் இருந்தோம் , அதனால் காரில் செல்வதை தவிர்த்து விட்டு பேருந்து பயணத்தை தேர்ந்து எடுத்தோம் , நானும் மணியும் போவதாய் முடிவு செய்தோம் .
      இறைவன் யாரை எப்பொழுது அழைப்பானோ அப்பொழுதுதான் நாம் அவனை அணுக முடியும் என்று எங்கோ படித்த நியாபகம் அதுபோல் 18 ஆம் தேதி அன்றே 5 பேர் செல்வதாக கூறி முடிவு செய்துவிட்டோம் . 19 ஆம் தேதி அன்று காலை 9 மணிக்கு பயணம் 25 லிட்டர் தண்ணீர் கேன் மற்றும் ஒரு கத்தி பின்பு தேவையான துணி எடுத்துக்கொண்டோம் அவ்ளவுதான் , முதலில் டீசல் நிரப்பிவிட்டு பீளமேட்டில் இருந்து தாராபுரம், காங்கேயம் , ஒட்டன்சத்திரம் , செம்பட்டி , தேனீ வழியாக சதுரகிரி செல்ல முடிவெடுத்தோம் . இடையில் செம்பட்டியில் அங்குராஜாவை அழைத்து கொண்டு சென்றோம் .
      செம்பட்டியை தாண்டி செல்லும் போது இயற்க்கை உபாதையை கழிக்க செல்லும் போது ரோட்டின் இருபுறமும் நாவல் மரங்கள் இருந்தது , அதில் நம் அண்ணன் தன்ராஜ் பழங்களை உலுக்க நாங்கள் அனைவரும் உண்டு ஓய்வெடுத்த பின்பு பயணம் செய்ய ஆரம்பித்தோம் . சிறுது நேரத்தில் ஒரு மணி அளவில் பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது . அந்த ஊர் பகுதியில் பிரபலமாக உள்ள மண் பானை உணவகத்தில் 5 பெரும் நன்றாக உணவரிந்தினோம் , மிகவும் சுவையாகவும் , உணவின் நிறம் மற்றும் சுவை குறையாமல் இருந்ததால் அளவை தாண்டி அதிகமாக உண்டோம் . அதுவும் 200 ரூபாயில் 5 பேர் . அவ்வுணவாக ஊழியரை வாழ்த்தி விட்டு பயணத்தை தொடங்கினோம் .
செம்பட்டி செல்லும்வழியில் 

             பின்பு வத்தல குண்டு பகுதியை அடைந்து அங்கிருந்து அழகாபுரி வழியாக தானி பாறையை அடைய முடிவு செய்தோம் . அங்கு இருப்பவர்கள் பேசுவது எங்களுக்கு புரியவில்லை என்பதால் சற்று வழி தவறி சென்று விட்டோம் . பேரையூர் வழியாக அழகாபுரியை அடைந்து மகாராஜபுரத்தின் வழியாக தானி பாறையை அடைந்தோம் .

      
அழகாபுரியில் இருந்து உள்ளே செல்லும் போது சதுரகிரி மலை என்னுள் வா அமைதியை ஆனந்தமாக பருகு என்று சொல்லாமல் சொல்லி அழைத்து கொண்டு இருந்தது.நம்மை அறியாமல் நம்முள் அந்த அமைதி இறங்குவதை உணர்ந்தால் சிறப்பாக இருக்கும்.எங்கள் வழி முழுவதும் வறட்சி தான் தென்பட்டது . தானி பாறையை எங்களை முதல் முதலில் வரவேற்றது அன்னதானம் அளிக்கும் மடம் , அங்கு அவர்களிடம் விசாரித்த போது அன்பாக இங்கேயே காரை நிறுத்திவிட்டு இறைவனை தரிசித்து விட்டு செல்லுங்கள் , அல்லது அங்கு சென்றும் நிறுத்தலாம் , இன்னும் சற்று தொலைவில் தான் மலை உள்ளது என்று கூறி அனுப்பி வைத்தார் . அவரிடம் விடை பெற்று கொண்டு சென்றோம் . கஞ்சி மடம் மற்றும் பல பகுதிகளை தாண்டி மூலிகை வனம் தானி பாறை என்ற இடம் ஏகலை வரவேற்றது . மணி மாலை 3.25 .
             அங்கு காரை நிறுத்தி விட்டு இறங்கும் போது எங்களை வரவேற்ற அறிவிப்பு பலகை சதுரகிரி ஹெர்பல் விளம்பர பலகை நாம் தேடி வந்தவர் திரு .கண்ணன் அவர்கள் இருப்பார்கள் என்று நினைத்து சென்றோம். அங்கு அவருடைய நண்பர் திரு பவுன்ராஜ் இருந்தார் . அவரிடம் கண்ணன் அவர்களின் இருப்பிடம்   அங்கு செல்லும் நேரம் காலம் எல்லாம் முடிவு செய்து விட்டோம்.
               பின்பு எல்லாரும் தேநீர் அருந்தி விட்டு குளுகோஸ் , பிஸ்கட் , பன் மற்றும் குரங்குகளுக்கு தனியாக பிஸ்கட் வாங்கி விட்டு காரை நிறுத்தி சென்றோம் .
ஆகஸ்ட்அங்கு ஒரு முதியவர் தனது பேரன் மற்றும் பேத்திகளோடு மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருந்தார் , காரை சரியாக நிறுத்துவதற்காக தன்ராஜ் அண்ணன் மட்டும் காரை பின் நோக்கி எடுக்க முயன்று கொண்டு இருந்தார் . நாங்க சுவாரசியமாக பேசிக்கொண்டு இருந்தோம் , இந்நிலையில் பின் புறமாக சென்ற கார் , அருகில் உள்ள முதயவரின் பேத்தி மேல் இடிக்க சென்று நூலிலையில் நின்றது அதுவும் நாங்களும்,அம்முதியவரும் போட்ட சத்தத்தினால்.
       முதியவர் மிகுந்த கோபமுற்று எங்களை திட்டி தீர்த்து விட்டார் , நான் அமைதியாக , டிரைவருக்கு சரியாக காத்து கேட்கவில்லை தாத்தா , கண்ணாடி முழுவதுமாக ஏற்றப்பட்டு இருக்குனு அதனால காது கேட்கல மன்னிச்சிடுங்க என்றேன் . அவரோ காது கேட்காதவரை ஏயா டிரைவரா வெச்சிருக்கீங்கனு பயங்கரமா திட்டினார்.அதன் பிறகு அவரை சமாளித்து விட்டு,உடை மாற்றி விட்டு பேக்கில் தண்ணீரும்,குளுகோசும்,கலந்து எடுத்து வைத்து கொண்டோம் , பின்னர் தின்பண்டங்களை சரி பாதியாக பிரித்து கொண்டு காருக்கு நிறுத்தக் கட்டணம் கொடுத்து விட்டோம் .
     எங்கள் பயண திட்டத்தில் பௌர்னமி அன்று தான் மலை ஏற திட்டம் இட்டோம்.ஆனால் திரு. பவுன்ராஜ் அவர்கள் மக்கள் விடிய விடிய மலை ஏறுவார்கள் என்றும் பிரச்சனையை இல்லை நீங்கள் தாராளமாக மலை ஏறலாம்,ஆனால் மலையில் தண்ணீர் பஞ்சம் என்று எச்சரித்து இருந்தார், சுந்தர மகாலிங்கம் பூசாரி அவருக்கு ஒரு துண்டு சீட்டில் ஐவர் குழு வருவர் அவர்களுக்கு உணவு மற்றும் தாங்கும் வசதியை செய்து தருமாரி கூறி எழுதி கொடுத்து இருந்தார் . இவர் கண்ணன் அவர்களின் நண்பன்,மூலிகை பொருட்களையும் கேசட், துணி , புத்தகம் மற்றும் பல பொருட்களை விட்ட்ருக்கொண்டு இருக்கிறார்.
    
19.08.13 அன்று 4.45 மணியளவில் மலை ஏற ஆரம்பித்தோம், முன்னதாகவே புகைப்படம் எடுத்துக்கொண்டோம் மலைக்கு கேமராவை எடுத்து செல்ல அனுமதி வாங்க வேண்டும் என்று கூறி வன அலுவலர்கள் மறுத்து விட்டனர்,பின்னர் மலை ஏற ஆரம்பித்தோம் .
     
   சற்று நேரத்தில் சமதள பரப்பு கடந்து மலைப்பகுதி ஆரம்பித்து விட்டது. 
        எனக்கு இது தான் பெரிய மலை ஏற்றம்,மலை ஏறி அனுபவமில்லை எனவே சற்று திகிலுடன் தான் பயணத்தை தொடங்கினேன்.
   
மலை ஏற்றம்
  மலை ஏற்றம் ஆரம்பமானது,பாதைகள் அழகாக தாரிட்டு அருமையாக இருக்கின்றது என்றெல்லாம் நினைத்தால் இரண்டடி எடுத்துவைத்தவுடன் , அது நினைப்பு மட்டும் தான் என்று தோணும் அளவுக்கு பாதையில் நிறையே கல் சிறிதளவு மண் , இல்லை என்றால் பாறைகள் இது போன்று தான் பாதை இருந்தது .
         செல்லும் பாதையில் நம்மை முதலில் எதிர்கொண்டது விநாயகர் கோவில்,காளி கோவில், பேச்சியம்மன் கோவில் , முதலில் விநாயகரை தரிசித்து திருநீறு  அணிந்து மலையேற ஆரம்பித்து விட்டோம் . ஏழு மலையை கடந்து தான் சுந்தர மகாலிங்கத்தை அடைய முடியும்,தொடக்க நிலையில் ஒரு சிறுகடையில் மூலிகை சூப் தயாராகி கொண்டிருந்தது . குடிக்கலாம் என்றால் இன்னும் சிறுது நேரம் ஆகும் என்று கூறினார்.எனவே அந்த திட்டத்தை கைவிட்டு , ஒரு பெரிய பாறையின் மீது ஏறி இறக்கத்தை சந்தித்தோம்.
      எங்களுக்கு இணையாக வந்த குழுவில் ஒருவர்,முதல் முறையாக மலை ஏறப் போகுறீர்களா,ஒன்றரை நேரத்தில் ஏறி விடுவார்கள் என்று கூறினார். அது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது இன்னும் வேகமாக மலை ஏற தொடங்கினோம்.
    சற்று தொலைவில் மதியம் 12 மணிக்கு மலை இறங்க ஆரம்பித்த ஒருவரை 5.15 மணிக்கு சந்தித்தோம், இன்னும் 3 மணி நேரம் ஆகும் என்று கூறியது மனதை தளர்த்தியது,வேகத்தை குறைக்காமல் ஏறினோம்.
     பயண களைப்பை போக்க சுந்தரிடம் ஏதேனும் பாடலை போடு என்றும், அவனோ ஓ ! செங்காடெ, சிருகரடே என்ற பாடலை போட்டு எங்களுடைய சூழ்நிலையை பூர்த்தி செய்து விட்டான்.
   சற்று களைப்பு அதிகமானது எனவே எடுத்து வந்திருந்த குளுகோஸை பருகி நடக்க ஆரம்பித்தோம்.சற்று நேரத்தில் அத்தரி மகரிஷி குகையை அடைந்தோம்.அங்கே சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மட்டற்ற நண்பர்கள் காலனியை கழற்றி வைத்து விட்டனர்,நான் மட்டும் காலணியுடன் சென்றேன் , நாங்கள் சென்ற பகுதி வழுக்குப் பாறை என்று அழைக்கப்படும் மலையில் நீர்வரத்து இருக்கும் பொது இடுப்புக்கு மேலே நீர் செல்லுமாம்.சங்கிலியை பிடித்துக்கொண்டு தான் மேலே ஏருவார்கலாம்.நாங்கள் சென்றபொழுது மலையே வறட்சியாக இருந்தது.இந்த பகுதி சற்று நெட்டு குத்தான பகுதி , நாலு கால் பாய்ச்சலால் ஏறினோம்,மேலே சற்று தொலைவுக்கு கீழ் புறம் தான் கோரகர் குகை உள்ளது . இருட்டு தொடங்கிவிடும் என்பதால் எதையும் கவனிக்காமல் மலை ஏறத் தொடங்கினோம்.
       கரடு முரடான பாதை என்பதை கேள்விப்பட்டு இருப்போம்,ஆனால் நாங்கள் பார்த்தது கரடு முரடானத்தை மட்டும் தான் . மிகப்பெரிய ஏற்றம், மிகச்சிறிய இறக்கம், நடக்க மட்டுமே முடியும் அளவிலான பாதை,இதுதான் வலி எங்களுக்கு வழி, 5 நிமிடங்கள் நடந்தால் 6 நிமிடம் ஒய்வு எடுப்பது குளுகோஸ் பானம் அருந்துவது என்ற முறையில் பயணம் தொடர்ந்தது .
      சற்று நேரத்திலேயே தன்ராஜ் அண்ணனை தொலைத்து விட்டோம், அவர் ஒய்வெடுக்காமலெ எங்களுக்கு முன்னரே கோவிலுக்கு சென்று விட்டார்.
      மலையில் சற்று சிறிய சமதள பரப்பு இருந்தால் அங்கே சுக்கு காபி, தண்ணீர் பாட்டில்,பழச்சாறு மற்றும் பிஸ்கட் போன்ற இதர பொருட்கள் வைத்து விற்று கொண்டு இருந்தார்கள் , நாங்கள் ஏற்கனவே எல்லாம் வாங்கி வைத்து இருந்ததால் அதெல்லாம் தேவையட்ட்ரவையாக தோன்றியது .
     சிறிய இடைவெளிக்கு பிறகு நாவல் ஊற்றுக்கு அருகில் வந்தோம், ஊற்று மட்டுமே பெயர் பலகையில் இருந்தது, அதன் பிறகு ஒரு ஐயர்கூட்டம் சிவபானம் அருந்த தயார் செய்து கொண்டு எங்களில் யாருக்கு புகை பழக்கம் இருக்கிறது என விசாரித்தனர்,யாரும் இல்லை என்று கூறி கிளப்பினோம் .
      14 கிலோ மீட்டர் பாதையில் 7 கிலோ மீட்டர் எப்படியோ கடந்து வந்து விட்டோம், அருகில் உள்ள கடையில் எலும்பிச்சை பழச்சாறு அருந்திவிட்டு, மணி மற்றும் அங்குராஜ் இருவரும் சுக்கு காபி குடித்தனர்,சிறிது நேரம் ஒய்வு எடுத்து கொண்டு மீண்டும் பயணிக்க ஆயத்தமானோம் .
      இடை இடையே வானர ராஜாக்களின் தொல்லை மிக அதிகள் நம் கையில் அபார அறிவை அவர்கள் பெற்று இருந்தனர், சுந்தரும் மணியும் இணைந்து 2 லிட்டர் தண்ணீரை அவர்களிடம் பரி கொடுத்துவிட்டனர்.
        சரியாக பாதி தூரத்தில் துர்க்கை அம்மன் சன்னதி மற்றும் இரட்டை மகாலிங்கம் சன்னதி ஆகியவை இருந்தன,அவர்களை தரிசித்துவிட்டு மலை ஏற பயணமானோம் .
    இவ்வளவு வந்தும் எத்தனை மலைகள் ஏறி இறங்கினோம் என்று தெரியவில்லை.
     வரும் வழியில் ஒரு குடும்பத்தில் மனைவிக்கு மயக்க நிலை ஏற்பட்டு விட்டது,கணவனும் , அவர்களது மகளும் அம்மாவுக்கு முதலுதவி செய்து கொண்டு இருந்தனர் , அவர்களிடம் சென்று தண்ணீர் வேண்டுமா ? என கேட்டோம் அவைகளும் இருக்கிறது வேண்டாம் என்று கூறினார்கள், சிறுது நேரம் ஓய்வுக்கு பின்பு மீண்டும் மலை ஏற்றம் தொடங்கியது .
        நாங்கள் பிலாவாடி கருப்பு சாமி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்யும் பொது இருள் முழுமையாக சூழ்ந்து விட்டது,புதிய பாதை ஆதலால் பாதை தெரியவில்லை.அங்கு இருக்கும் நபரிடம் வழி கேட்டோம், அவரும் எங்களுடனேயே வந்தார் .
      அப்போது தான் பார்க்க லைட் எடுத்து வராதது எவ்வளவு பெரிய தவறு என்று தோன்றியது.
        திருநெல்வேலியை சார்ந்தாவர் என்றும் மூலிகை கடை நடத்தி வருகின்றார் என்றும் புரிந்து கொண்டோம், அதற்குள் பௌர்னமி நிலவு ஒளியை பாய்கிறது.
      ஒரு வழியாக கடைகள் உள்ள பகுதி எங்களுக்கு தென்பட்டவுடன் ஆனந்தம் அடைந்தோம்.மேலே சென்றதும் என்னுடைய காலனியை ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டு கோவிலை அடைந்தும், வழியில் மகாலிங்கம் என்று சிறைய கோவில் பின்பு காஞ்சி மடம், அதன் பிறகு இன்னொரு மடம் அதன் பிறகு கோவில்,கோவிலுக்கு மேற்புறம் அம்மா மடம் அதற்க்கு கீழ் ஒய்வு எடுக்கும் அரை இருந்தது.போகும் பொது ஒரு மடத்தில் வாங்க சிலர் சாப்பிடலாம் என்று கூறி அழைத்தனர்.
        என்னுடைய 24 வருட அனுபவத்தில் அன்னதானத்தை அன்பாக அழைத்து பரிமாறிய இடம் என்றால் அது சதுரகிரி மலையில் உள்ள மடங்கள் தான்,உணவு பொருட்கள் அனைத்தும் மனிதனால் தலையில் சுமந்து 14 கிலோ மீட்டர் வருகிறது எனவே இங்கு வரும் அனைவருமே உணவை வீணாக்க விரும்புவதில்லை எனபது கண் கூடாக கண்ட காட்சி .
          கோவில் நடை காலையில் 6 மணிக்கு தான் திறப்பார்கள் என்று அங்குள்ள மடத்தின் தொண்டு செய்யும் அன்பர் கூறினார்,அவர் பொள்ளாச்சி பகுதியை சார்ந்தவர் என்பதால் அன்பாக உபசரித்து சூழ்நிலையை விளக்கி கூறினார் . ஒய்வு எடுக்கும் மண்டலத்தில் பொருட்களை வைத்து விட்டு, முகத்தை சுத்தம் செய்துவிட்டு வாருங்கள் உணவருந்திவிட்டு செல்லலாம் என்று கூறினார்,அதன்படியே செய்துவிட்டோம்,அந்த மடத்தின் படியை மிதித்தோம் .
     தட்டுகளை நாமே கையில் ஏந்தி கொண்டு வரிசையில் நின்று உணவை பெற வேண்டும். வரிசையாக நின்றோம் நமக்கு தேவையான அளவு மாட்டும் வாங்கி சாப்பிடுங்கள் மறுமுறை தேவைப்படும் என்றால் வாங்கி கொள்ளுங்கள் என்று அன்பாக வேண்டுகோள் வைத்தனர்,சாதம்,ரசம்,மோர், சாம்பார் என்று சிறப்பாக அமிர்தம் போல் இருந்தது மலை ஏறிய எங்களுக்கு சாதத்தை ஒரு பருக்கை கூட வீண் செய்ய விரும்பவில்லை,இயலவும் இல்லை,உணவருந்திய பின்பு அன்பர் ஒருவர் இரவு 12 மணிக்கு சப்பாத்தி , ரொட்டி,உப்புமா என்ற பொருட்கள் தயாராகி விடும் முருபடியும் வந்து உணவருந்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்தனர் .
     பின்பு ஓய்வெடுக்கும் அறையை நோக்கி சென்று உறங்க தொடங்கினோம், ஒரு கொசு கூட இல்லை,இனிமையாக காற்று சுகமான உறக்கம் .
    சிலர் தியானத்தில் இருந்தனர் அதை பார்த்த ஒரு ஐயர் ஒருவர் ஏன்னா உக்காந்திருக்கேல்,தூக்கம் வரலையான்ன அப்டினு கேட்டார்,தியானத்தில் இருப்பவர்கள் பேசுவார்களா ? மௌனமே பதிலே கிடைத்தது,இருவரும் விடுவதாக இல்லை , நீங்கள் மட்டும் தான் ஒக்காருவீர்களா? நானும் அமருகின்றேன் என்று கூறி அவரும் அமர்ந்து விட்டார்.இந்த கூத்தை நினைத்து சிரித்து கொண்டு உறங்கி விட்டோம். காலை 6 மணிக்கு எழுந்து காலை கடன்களை முடித்து விட்டு சுக்கு காபியும், ரொட்டியும் அருந்தினோம் ,அதன் சுவையே அலாதியாய் இருந்தது , அப்படியே சுனைக்கு சென்றோம் ஒரு வாலி நீர் 20 வீதம் ஐந்து பெரும் குளித்தோம் அதற்க்கு மேல் ஒரு சொட்டு நீர் கூட தர சம்மதிக்கவில்லை பிறகு,பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்க வரிசையில் நின்றோம் .
       கோவில் அது பொன்னால் வேயப்பட்ட கூரை,பெரிய ராஜகோபுரம் , அழகிய ஓவியம் , சிறந்த சிற்பங்கள் என்று எதுவும் இல்லை சிறியி அழகான மனதை தொல்லையடித்து அமைதியை விட்டு செல்லும் ஒரு சூழலில் சுந்தர மகாலிங்கம் வரிசையில் வருவோருக்கும் சிறப்பாக காட்சி அளிக்க சற்று சாய்ந்து நம்மை பார்த்து அழைப்பது போல் இருந்தது , தரிசனத்தை முடித்து விட்டு வெளியே வரும்போது அம்மா மடத்தில் உள்ள அன்பர்கள் மிகவும் அன்பாக சூடான பொங்கல் இட்லி இருக்கின்றது வந்து உண்டு செல்லுங்கள் என்று அன்பாக அனைவரையும் அழைத்தனர் .
       பின்னர் உடமைகளை எடுத்து கொண்டு நேற்று இரவு உணவருந்திய மடத்திற்கு சென்று சூடாக பொங்கல் மற்றும் உப்புமாவை உண்டுவிட்டு , சுந்தன மகாலிங்கத்தை தரிசிக்க சென்றோம் .
     முதலில் சென்றது சட்டை முடி குகை அங்கே தரிசித்து விட்டு 18 சித்தர்ககளை தரிசித்த பின்பு சந்தன மகாலிங்கத்தை தரிசித்தோம் பின்பு அம்மனை தரிசித்து கொண்டு வந்த பொது அதற்கு மேல் உள்ள பெரிய மகாலிங்கம் கோவில் தபசு பாறை மட்டற்ற சில பகுதிகளை பார்க்க வனத்துறை தடை செய்துள்ளது,அதனால் அங்கு செல்ல இயலாமல் திரும்பி வந்து விட்டோம்.சதுரகிரியில் உள்ள கடைகளில் பெரும்பானவை சாம்ராணி, உணவு,காபி கடையும் ,சில பூஜை பொருள் விற்கும் கடையும் ஒரு சில மூலிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடையும் இருந்தது .
      அங்க அருகில் உள்ள மடத்திலும் உணவருந்த அழைத்தனர்,அவரின் அன்பான வேண்டுகோளை பண்பாக மறுத்து விட்டு வந்தோம்,இலையே திரியாக எறியும் ஒரு மூலிகையை வாங்கிய பின்பு கீழே இறங்க ஆரம்பித்தோம் .
       சரியாக 7.59 மணியளவில் இறங்க ஆரம்பித்தோம் ,இரம்கும் பொது தான் தெரிந்தது எவ்வளவு கரடு முரடான அபாயகரமான பாதை வழியாக இதற்க்கு முன்பு வந்தோமா என்ற கேள்வி ஒவ்வொரு ஒவ்வொரு நிமிடமும் நமக்கு ஏற்பட்டது .
      நாவல் தீர்த்தத்தின் அருகில் சிறுது நேரம் ஓய்வும் , இரட்டை மகாலிங்கம் அருகில்  எலும்பிச்சை சாரும் அருந்தி ஒய்வு எடுத்து கொண்டு இடைவிடாமல் இறங்கி 9.45 மணியளவில் அத்தரி மகரிஷி பாறையை அடைந்தோம் , நானும் மணியும் , எங்களுடன் வந்தவர்கள் புகைப்படம் எடுப்பதிலும் கோர்கள் குகைக்கும் சென்றனர் , அவர்களுக்காக ஒரு மணி நேரம் காத்திருந்து , பின்பு நீண்ட வெயில் காரணமாக இறங்க ஆரம்பித்தோம் .
 வரும் வழியில் மூலிகை சூப் தயாராக இருந்தது , அதை அறுந்து விட்டு , மீதம் இருந்த நீர் , குளுகோஸ் என அனைத்தையும் காலி சிஎஹ்டுவிட்டு ஒய்வு எடுத்து கொண்டு இருந்தோம், அனைவரும் வந்துவிட்டனர் , பின்பு மீதம் இருந்த ரொட்டிகளை வழியில் இருந்த அடியாருக்கு அளித்துவிட்டு கீழே இறங்கினோம் , வன அலுவலர்கனின் தீவிர சோதனைக்கு பிறகு பக்தர்கள் மேலே சென்று கொண்டு இருந்தனர் , முகப்பில் புகைப்படம் , கொய்யா பழம் மற்றும் இயற்கை மூலிகை சம்பராணி வாங்கி கொண்டு திரும்பினோம், அந்த பகுதியல் மறுபடியும் ஒரு அன்னதான குழுவை பார்த்தோம், அவர்களும் அன்பாக உரக்க கத்தி அழைத்தனர் . காய்கறி பிரியாநியுடம் சாம்பார் மிக இனிமையாக இருந்தது மணி 12 தான் பின்பு காருக்கு சென்று பொருட்களை வைத்து விட்டு பாட்டில்களில் தண்ணீர் நிரம்பினோம் , பவுன்ராஜ் அவர்களிடம் சொல்லிவிட்டு போகலாம் என்று இருந்தால் அவர் உறங்கி கொண்டு இருந்ததினால் அவரை தொந்தரவு செய்யாமல் வந்து விட்டோம் . அவர் எங்களுக்கு அளித்த கடிதத்ததை மேலே சென்று காட்டி தனி கவனம் பெற விரும்பவில்லை எனவே அதை நாங்கள் உபயோகிக்காமல் விட்டு விட்டோம் .
       அடுத்ததாக காண்சாபுரத்தை நோக்கி எங்களது பயணம் தொடங்கியது , வழி பிரச்னையை விட வழி செல்பவர்கள் பேசும் வார்த்தை புரிந்து கொள்ள மிக சிரமப்பட்டோம் . மறுபடியும் தவறான வழியை புரிந்து கொண்டு வத்திராயிருப்பு போகுவதர்க்கி பதிலாக அழகாபுரியை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தோம்.மகாராஜபுரத்தை தானித்யா உடன்தான் வழி தவறிய வலி புரிந்தது மறுபடியும் வந்த வழியில் பயணம் செய்து காண்சாபுரத்தை அடைந்தோம் . அங்குள்ள வீடுகளில் முகப்பு மாத்திரம் பூசப்பட்டு இருந்தது , பின்புறம் பூசப்படவில்லை இந்த கேள்வியுடன் அவர் வீட்டுக்கு வழி கேட்டு சென்றோம் , கடைசியாக அவரிடமே கேட்டோம் வழியை , அவர் வீட்டுக்கு அழைத்து சென்றார் நன்கு உபசரித்தார் , பரஸ்பர விசாரிப்பிற்கு பின்பு மூலிகைகள் பற்றி கூறினார்.
     
அவரிடம் சிறப்பு என்னவென்றால் பணத்திற்கு மதிப்பு தருவது இரண்டாமிடம் தான், நம் சுற்றுபுறத்தில் கிடைக்க கூடிய , வாங்க கூடிய பொருட்களை அவரே சொல்லிவிடுகின்றார் , கிடைக்க இயலாத மூலிகை பொருட்களை கொண்டு தயாரிக்கும் மருந்து  பொருட்களை மட்டும் தான் அவர் தருகின்றார் , அதை பார்க்க காண http://sathuragiriherbals.blogspot.in/ செல்லவும் .
       3.30 மணியளவில் அவரிடம் விடைபெற்று கொண்டு மதுரை பைபாஸ் வழியாக திண்டுக்கல் செல்லும் வழியில் செம்பட்டியை அடைந்தோம் அங்கே டீ அருந்திவிட்டு அன்குராஜை அனுப்பி விட்டு புறப்பட்டு 9 மணிக்கு முன்னதாகவே வீடு வந்து சேர்ந்தோம்.
               பயணங்கள் சிலருக்கு பயணத்தை போக்கும், சிலருக்கு தெளிவை கூட்டும்,சிலருக்கு சில விஷயங்கள் மறக்க முயுமோ இல்லை மறக்க தோன்றவோ வைக்கும் . ஆனால் பயணங்கள் தான் மனிதனை பிறப்பொருந்து இறப்பிற்க்கு அழைத்து செல்லுகின்றது என்ற உண்மையை நினைத்து கொண்டு உறங்க சென்றேன்.
   நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள் சதுரகிரி மலைக்கு என்று சொல்ல நான் ஆன்மீகவாதி அல்ல , உங்களை அது அழைக்கும் அப்போது செல்லுங்கள் ஆனந்தமாய்   

3 comments:

  1. சதுரகிரி ஹெர்பல் கண்ணன் ஒரு ஏமாற்றுப் பேர் வழி. முதலில் இரண்டு மூன்று முறை அக்கறையாக மருந்து அனுப்புவது போல் அனுப்புவார். பிறகு, நீங்கள் எந்த வியாதியில் அவதிப்பட்டாலும், முப்பது அல்லது நாறபது முறை போன் செய்தாலும், "அப்படிங்களா சார், அனுப்பிடுறேன் சார், முடிச்சிடலாம் சார், இதோ நாளைக்கு அனுப்பிடுறேன் சார்" என்று சொல்வாரே தவிர, மருந்து வந்து சேராது. எதற்கு இந்த பிழைப்பு? முடிந்தால் மருந்து அனுப்ப வேண்டும். உன்னிடம் மருந்து இல்லையா, என்னிடம் இப்போது இல்லை, பிறகு அனுப்புகிறேன் என்று சொல்லி, குறித்து வைத்துக்கொண்டு மருந்து செய்ததும் அனுப்ப வேண்டும்.
    என்னைப்போன்று எத்தனை பேரின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்கிறாரோ தெரியவில்லை.
    காரண காரிய தொடர்பே இந்த உலகம். நோயாளிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு, இதோ அதோ என்று ஏமாற்றிக்கொண்டிருகிறார். இந்த காரணத்திற்காக என்ன காரியம் நடக்கப் போகிறதோ தெரியவில்லை. வினை விதைத்துக்கொண்டிருக்கிறார்.
    சதுரகிரி உறையும் தெய்வங்களும், சித்தர்களும் இவருக்கு நல்ல புத்தி அருள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். நான் காசு கொடுத்துட்டு, நான் பட்ட பாடு, கடவுளுக்குத்தான் தெரியும். மருந்து அனுப்புறத்துக்கு 1 மாசமே பண்ணிட்டான்.
      அவனுக்கு 100 தரத்துக்கு மேலே போன் பண்ணிருப்பேன்.

      Delete