Monday, October 21, 2013

இரண்டாவது முறை சதுரகிரி மலை பயணம்.....

இந்த முறை என்னுடைய பிறந்தநாள் அன்று சதுரகிரி மலையில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ,பயணமானோம் .நான்,சுதீஷ் அங்குராஜ்,பூபாலன் ,மணிகண்டன் என இவர் குழு தயாரானது .18 அன்று காலை நானும் சுதீஷும் ,பேருந்து முலமாக கோவையில் இருந்து பொள்ளாச்சி சென்று காலை 7.45க்கு மணி மற்றும் பூபாலன் உடன் காரில் ஒட்டன்சத்திரம் நோக்கி பழனி வழியாக சென்றோம் ,அங்கே காலை உணவு அருந்த காரை நிறுத்திவிட்டு சென்றோம் ,அங்குராஜ் வந்தார் உணவருந்திவிட்டு ,அருகில் உள்ள இயற்கை அங்காடியில் திரிபலா மற்றும் கற்கண்டு வாங்கிவிட்டு,வியாபார வழிமுறைகளை கேட்டு அறிந்து சென்றோம்,பள்ளப்பட்டியில் உள்ள ஒரு முருங்கை பண்ணையில் வருடம் முழுவதும் காய்க்கும் முருங்கை நாற்று பற்றி உரிமையாளர் அழகர்சாமி(98653 45911 & 9791774887) அவர்களிடம் விசாரித்துவிட்டு திரும்பிவரும்  போது வாங்குவதாக கூறி  பயணத்தை தொடர்ந்தோம்,இடையில் மீனாட்சி அம்மன் கோவில் செல்வது என்று முடிவு செய்து சென்றோம்,கீழே இறங்கியவுடன் மதுரை ஸ்பெசல் ஜிகர்தண்டா அருந்தினோம் ,நடைசாத்தி இருந்ததால் வெளிப்புறமாக நின்று படம் எடுத்துவிட்டு திரும்பினோம்.

மீனாட்சி அம்மன் கோவில் முன்பு 

அங்கிருந்து  திருபரகுன்றம் ,திருமங்கலம் வழியாக செல்வதற்கு பதிலாக வழி மாறி சென்றுவிட்டோம் அருகில் உள்ள உணவகத்தில் மதிய உணவு அருந்திவிட்டு அவர்களிடம் வழி கேட்டு தே.கல்லுப்பட்டி வழியாக அழகாபுரி செல்லும் வழியில் நீர்,குளுகோஸ் மற்றும் தேவையான பொருள்கள் அனைத்தும் வாங்கிவிட்டு மலை அடிவாரம் அடைந்து காரை  நிறுத்திவிட்டு  மலை ஏற தொடங்கினோம்,அங்கு  நண்பர் பவுன்ராஜ் எங்களை அடையலாம் கண்டு நலம் விசாரித்தார்.
அடிவாரத்தில் 

நண்பர்களுடன் 

பின்பு மாலை 5.28 மலை ஏறதொடங்கினோம்,மலையில் 2.5 வருடத்திற்கு பிறகு தற்போதுதான்  மழை ,எங்கு பார்த்தாலும் நீர் அருவியாக வந்து கொண்டு இருந்தது ,போன பயணம் இதற்கு தலைகீழ் ஆகா இருந்தது ,அது வரட்சியான பயணம் இது குளிர்ச்சியான பயணம் ,வானம் மந்தமான நிலையில் தான் இருந்தது ,அருகில் உள்ள கடையில் தேன் நெல்லி உண்டோம்,வரும் அருவிகளில் எல்லாம் குளிக்கும் ஆசை இருந்தது அனால் நேரம் இல்லாத காரணத்தால் சங்கிலி பாறைக்கு சென்று குளித்து விடு மீண்டும் மலை ஏற தொடங்கினோம்.

பாதி பகுதிக்கு முன்னரே மழை மெதுவாக பொழிய தொடங்கியது,களைப்பு அறவே இல்லை ,தண்ணீர் பாட்டில் சுமை மட்டுமே இருந்தது,செல்ல செல்ல மழை வலுவாகவும்,குறைவாகவும்,இடி மின்னல் என்று மாறி மாறி வந்து .எங்கள் குழுவில் இருவர் புதியவர் ,எனவே பழைய கதைகளை பேசி பயணத்தை சுக்கு காபி,ராகி வடை கொண்டு தொடங்கினோம்,குரங்குகள் எதையும் காணவில்லை ,இரட்டை மகாலிங்கம் தான் பாதி பயனதுரம்,அதற்குள் நல்ல மழை ,நனைந்து  கொண்டே  மலையில் பயணமானோம்.பயண பாதை வெறும் கற்கள்ளகதான் இருக்கும் ,இரவு நேரம்வேறு,காலுக்கு அடியில் நீரும் அதற்கு கீழ் தான் கல் இருந்து.
வேகமாகவே,மழையின்  வேகத்துக்கு சற்று குறைவாகவே ஏறினோம்.நீர் பாதையை நிறைத்துவிட்டது,மேலும் பிலா அடி கருப்பண்ண சாமி கோவிலுக்கு அருகில் கனமழை சற்று ஒதுங்கினோம்,நான் குடை கொண்டு வந்து இருந்தேன் அதை விரித்தேன்,அங்குள்ள கடைக்காரர் மேலே கனமழை சற்று நேரத்தில் வெள்ளம் வரபோகுது நேற்றும் இந்த நேரத்தில் வெள்ளம் வந்தது நீங்கள் வேறு எங்காவது சென்றுவிடுங்கள் என்று  சொன்னது கூட கேட்டகாமல் அசுர வேகத்தில் மலை ஏறி கோவிலை அடைந்தோம்,கோவில் படிக்கட்டுகளில் நீர் அருவி போல ஆர்ப்பரித்து வந்தது அதை கடந்து வள்ளியம்மை  தாங்கும் சாத்திரத்தை இரவு 8.25கு அடைந்தோம்,சிறிய இடத்தை தவிர அனைத்தும் மக்கள் கூட்டம் ,சத்திரம் பதையில் துண்டை போட்டு அமர்ந்தோம்.

அணைத்து உடைகள் ,போர்வை,போன் ,எல்லாமே நனைந்துவிட்டது,தரைவிரிப்பும் ஈரம் ,வேறு வலி இல்லாமல் விரித்து விட்டோம்,அன்னதான சத்திரம் சென்று சூடாக உணவு அருந்தினோம்,மழை மெதுவாக தான் பெய்ந்தது.

உடை ஈரமாக இருக்கிறது என்பதாற்காக ,சிறிய போர்வை,நனைந்து இருந்தது ,அதை அணிந்துகொண்டு உறங்க ஆரம்பித்தேன்,ஈரம் உடலை ஊறவைத்தது ,துக்கம் வரவில்லை ,10.45 அளவில் நானும் மணியும் சென்று ஒரு வேட்டி 120கும் துண்டு 40கும் வங்கி வந்து அணிந்து கொண்டு உறங்க ஆரம்பித்தோம்,
மழை மிகவும் வழுத்தது,பேய் மழை நாங்கள் அதை பார்த்தோம்,பார்த்துக்கொண்டே உறங்கி போனோம்.

                                                         
கோவிலில் 

சுந்தரமகலிங்கம் கோவிலுக்கு பின்புறம் 
6 மணிக்கு எழுந்து பல்போடியோடு காலைகடனைமுடிக்க நெடுந்தூரம் சென்றோம் ,குளிக்க வசதியான இடத்தை சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள பலத்துக்கு கீழ் பார்த்து வைத்து பின்பு வந்து குளித்துவிட்டு,அன்னதான சத்திரத்து சென்று உணவருந்திவிட்டு சுந்தரமஹளின்கத்தை தரிசித்துவிட்டு அமர்ந்தோம் ,அங்குராஜ்,சுதீஷ் இருவரும் சென்று வரும் வரை காத்திருந்தோம்,வந்தவுடன் சந்தன மகாலிங்கம் & சட்டை முனி கோவிலுக்கு சென்று தரிசித்துவிட்டு கீழ் உள்ள மூலிகை கடையில் சாம்பிராணி திரிஇலை ,சர்க்கரை கொல்லி இலை என வங்கி கொண்டு கலை 9.30கு இருங்க ஆரம்பித்தோம்.வரும் போது நிதானமாக இறங்கினோம் நேற்று கொண்டுவந்த குளுகோஸ் நீர் இன்றுதான் குடித்தோம்.


வனதுர்க்கை அம்மன் கோவில் அருகே 
வரும் வழி எல்லாம் நேற்று வந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது ,நாங்கள் வந்த வழிதான என்று எங்களுக்கு மிகுந்த சந்தேகம் ,இருப்பினும் நிறைய புகைப்படங்கள் எடுத்து கொண்டு ,கோரகர் குகைக்கு அருகில் குளிக்க முடிவு செய்தோம், சுக்கு காபி,ராகி வடை சாப்பிட்டு குகை அருகே சென்றோம்.

கோரகர் குகை அருகே நீர் மிகவும் ஆர்பரித்து அழகாக ஓடியது,நீண்ட நேரம் குளியல் ,புகைப்படம் என எடுத்துவிட்டு ,கோரகரை வழிபட்டு ,பின்பு சங்கிளிபறையை நோக்கி சென்றோம்.அங்கு தண்ணீர் நெறைய இடத்தை அடைத்து கொண்டு ஓடியது ,நீரினுள் காலைவைத்து கொண்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தோம்.
ஓய்வாக ஓர் இடத்தில் 


அப்போது ஒரு நாய் மேலிருந்து வந்து இளைபரிகொண்டு இருந்தது அப்போது ஒரு முதியவர் போட்ட மிக்ஸ்ரை உண்ணாமல்,போய்  நீரை அருந்திவிட்டு மறுபடியும் வந்து அதை உண்டு,திரும்பி இறங்கி வந்த மலையை பார்த்து கொண்டு இளைப்பரிகொண்டு இருந்தது,

மலை இறங்கும் போது 

அடிவாரம் நோக்கி பயணம் தொடங்கியது,வரும் வழியில் முலிகை சூப்
மற்றும் சில பொருள்களை வாங்கிகொண்டு,அடிவாரம் வந்தோம் மதியம் 1 மணி,அன்னதானம் நடை பெறவில்லை,பின்பு பவுன்ராஜ் கடைக்கு சென்று அகத்தியர் படம் மற்றும் சில பொருள்கள் வாங்கிகொண்டு வந்தோம் ,ஹெர்பல் கண்ணனுக்கு தொடர்பு கொண்டபோது,அவர் வெளில்  சென்ருவிடதகவும் தற்போது சந்திக இயலாது என்று கூறி  நீங்கள் முனெர தொலைபேசியில்சொல்லி இருக்கலாமே என்று வருந்தினர் ,அடுத்த முறை வரும் போது நானும் உங்களுடன் வருகிறேன் என்று கூறி அனுப்பினார்,பின்பு தே.கல்லுப்பட்டியில் வந்து உணவருந்தி, தொலைபேசிக்கு சார்ஜ் செய்துவிட்டு,பள்ளப்பட்டிக்கு சென்று முருங்கை நாற்று வாங்க போனோம் ,அவர் மதுரை சென்று விட்டதாகவும் உதவியாளர் மூலம் தேவையான கன்றுகளை இலவசமாக கொடுக்க சொன்னார்,நாங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து கொஞ்சம் பணம் கொடுத்து 16 கன்றுகள் வங்கி வந்தோம்.

ஒட்டு முருங்கை நாற்றுகள் 

ஏறக்குறைய ஒரு மணி நேரம் பலம் உடைப்பு,திருவிழா,மற்றும் ,பாதை மாறி எனா கடந்து ஒட்டன்சத்திரம் அடைந்தோம் ,அன்குரஜ்ன் உடமைகளை எடுத்து கொண்டு இரவு 10 மணிக்கு பொள்ளாச்சி வந்தோம்,பொருள்களை பிரித்துக்கொண்டு பேருந்து ஏறி 11 மணிக்கு உக்கடம் வந்து 11.30க்கு RVR உணவகத்தில் உணவு உண்டு ,வந்து அடைந்தோம் .

இந்த பயணம் முற்றிலும் ஒரு குளுமையான பயணம்,மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்.